வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

குமரியில் உள்ள கோவில்களின் முக்கிய திருவிழாக்கள்

Published On 2022-03-31 08:55 GMT   |   Update On 2022-03-31 08:55 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

* மார்கழி மாத பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். மார்கழி மாத மூல நட்சத்திரம் தினத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறும்.

* 10 நாட்கள் நடைபெறும் சித்திரை

தெப்பத்திருவிழா, ஆவணி திருவிழா

* சித்திரை விசு கனிகாணல் விழா.

* மாசி மாதம் மாசி திருக்கல்யாண திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.

* சிவன் கோவில் என்பதால் மாதத்திற்கு 2 நாட்கள் பிரதோஷ வழிபாடு நடைபெறும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்


* மாசித்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இதில் 6-ம் திருவிழாவில் நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை மற்றும் 10-ம் திருவிழாவில் நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நாட்களில் கேரள பெண்கள் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்வர். இதனால், இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

* வலியப்படுக்கை பூஜை ஆண்டுக்கு 3 முறை நடைபெறும். அதாவது, கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, மாசித்திருவிழாவில் 6-ம் நாள், பரணி நட்சத்திரம் தினத்தன்றும் வலியப்படுக்கை பூஜை நடைபெறும்.

நாகர்கோவில் நாகராஜா கோவில்

* தைத்திருவிழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். தைதேரோட்டம் சிறப்பு வாய்ந்தது.

* ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள். இதுபோக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதி

* ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிறுக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடை நடைெபறும்.

* மாசி மாதம் 20-ந்தேதி அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழா நடைபெறும்.

* வருடத்தில் தை, ஆவணி, வைகாசி ஆகிய 3 மாதங்களில் 11 நாட்கள் திருவிழாவும், 12-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.

* கார்த்திகை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கி 17 நாட்கள் நடைபெறும்.

* பங்குனி மாதம் சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் முத்துக்குடை ஊர்வலம் நடைபெறும்.

கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

* சவேரியார் ஆண்டு திருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா தர்கா


தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் ரஜப் மாதத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

பள்ளியாடி பழையபள்ளி திருத்தலம்

இந்த திருத்தலம் நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்துக்கள் தீபம் ஏற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், முஸ்லிம்கள் தூபமிட்டும் வழிபடுகின்றனர். மார்ச் மாதம் சமபந்தி விருந்து இங்கு பிரமாண்டமாக நடைபெறும்.
Tags:    

Similar News