ஆன்மிகம்
சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் பால்குட விழா

சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் பால்குட விழா

Published On 2021-02-13 03:16 GMT   |   Update On 2021-02-13 03:16 GMT
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடைபெற்றது.
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றில் எழுந்தருளினார்.

தொடர்ந்து உற்சவ மூர்த்தியுடன் ஏராளமான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், காவடிகள் எடுத்து குடமுருட்டி ஆற்றிலிருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை சந்தனக்காப்பு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர், சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர் மற்றும் அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News