செய்திகள்
கூடங்குளம் அணு உலை

கூடங்குளத்தில் 2-வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

Published On 2021-11-24 06:36 GMT   |   Update On 2021-11-24 06:36 GMT
கூடங்குளத்தில் 2-வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதலில் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2-வது அணுமின் நிலையங்கள் செயல்படத் தொடங்கி, தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி 2-வது அணு உலையில் உள்ள டர்பன் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலை உடனடியாக நிறுத்தப்பட்டது. அதில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலைய என்ஜினீயர்களும், விஞ்ஞானிகளும் சென்று பழுதுகளை சரி செய்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை டர்பன் இயக்கம் சரி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது அணு உலை மீண்டும் இயக்கப்பட்டது. உடனடியாக மின் உற்பத்தியும் தொடங்கியது. 2-வது அணு உலையில் முதலில் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இன்று பிற்பகல் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதன் பின்னர் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்.

Tags:    

Similar News