செய்திகள்
சர்வதேச விமான சேவை

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

Published On 2021-03-23 17:53 GMT   |   Update On 2021-03-23 17:53 GMT
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவலால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த உள்நாட்டு விமானங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், ஏப்ரல் மாதத்திற்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
Tags:    

Similar News