ஆன்மிகம்
ஜம்புகேஸ்வரர் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

திருவானைக்காவலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்

Published On 2019-09-09 05:01 GMT   |   Update On 2019-09-09 05:01 GMT
திருவானைக்காவலில், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக் கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை அடைந்தனர்.

அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News