வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்

Published On 2021-12-10 04:17 GMT   |   Update On 2021-12-10 04:17 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று புஷ்ப யாகம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் கோவிலின் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று புஷ்ப யாகம் நடந்தது.

அதையொட்டி நேற்று காலை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பாஞ்சராத்ரா ஆகம ஆலோசகரும் கங்கணப்பட்டருமான சீனிவாசாச்சாரியார் தலைமையில் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சாமந்தி, சம்பங்கி, கன்னேறு, ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், தாமரை, முகலி, மானு சம்பங்கி, மருவம், தவனம், பில்வம், துளசி, கதிரி பச்சை என 12 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.

அதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ெபறப்பட்ட 3½ டன் எடையிலான மலர்கள் பயன்படுத்தப்பட்டன. புஷ்ப யாகத்துக்காக ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபம் கருப்பு, பச்சை நிற திராட்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News