செய்திகள்
தேவே கவுடா

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா

Published On 2019-09-21 10:50 GMT   |   Update On 2019-09-21 10:50 GMT
கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட உள்ளது என முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 64  தொகுதிகளுக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இந்நிலையில், கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட உள்ளது என முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளிலும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News