செய்திகள்
கோப்புப்படம்

கோவிஷீல்டு 2-வது டோஸ் போட வந்தால் திருப்பி அனுப்பக்கூடாது - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Published On 2021-05-16 22:38 GMT   |   Update On 2021-05-17 12:09 GMT
கோவிஷீல்டு 2-வது டோசுக்கான கால இடைவெளியை மாற்றுவதற்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்தது செல்லும். அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கான கால இடைவெளியை 12 வாரங்கள் முதல் 16 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதனால், கோவிஷீல்டு 2-வது டோஸ் போட ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு 12 வாரம் (84 நாட்கள்) முடிவடையாதநிலையில், தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவிஷீ்ல்டு 2-வது ேடாசுக்கான கால இடைவெளி மாற்றப்பட்டது குறித்து அனைத்து மாநிங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். ‘கோ-வின்’ இணையதளத்திலும் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்து, 84 நாள் இடைவெளிக்கு முன்பே வருபவர்கள், தடுப்பூசி போடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே செய்த ஆன்ைலன் முன்பதிவு, தொடர்ந்து செல்லுபடி ஆகும். அது, கோ-வின் இணையதளத்தில் ரத்து செய்யப்படவில்லை.

ஆகவே, அத்தகைய முன்பதிவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மதிக்க வேண்டும். அத்தகைய நபர்கள் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி போட வந்தால், அவர்களை திருப்பி அனுப்பாமல் தடுப்பூசி போட்டு விடுமாறு தடுப்பூசி மைய ஊழியர்களுக்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன், ஏற்கனவே 84 நாள் இடைவெளிக்கு முன்பே 2-வது டோஸ் போட முன்பதிவு செய்தவர்கள், 84 நாள் இடைவெளிக்கு பிந்தைய மற்றொரு தேதியில் தங்களது முன்பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில், இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், 84 நாள் இடைவெளிக்கு குறைவான தேதியில் புதிதாக ஆன்லைனிலோ, நேரடியாகவோ முன்பதிவு செய்ய முடியாது.

இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News