ஆட்டோமொபைல்
மஹிந்திரா டியுவி300

கொரோனா காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா எடுத்த முடிவு

Published On 2020-05-16 08:39 GMT   |   Update On 2020-05-16 08:39 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



மஹிந்திரா நிறுவனம் டியுவி300 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் டியுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.

2020 மஹிந்திரா டியுவி300 மாடல் மட்டுமின்றி டியுவி300 பிளஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகி உள்ளது. இரு மாடல்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரேமாதிரி வழங்கப்பட்டுள்ளது. டியுவி300 பிளஸ் மாடலில் அதிக இருக்கைகளுக்கு தேவையான இடவசதி மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இரு மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு மாடல்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கிரில் மெல்லிய ஸ்லாட்கள், மேம்பட்ட பம்ப்பர் டிசைன், ஸ்போர்ட் வடிவமைப்பில் ஏர் டேம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா டியுவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது 98 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டியுவி300 பிளஸ் மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News