செய்திகள்
காற்று மாசு

காற்று மாசு அச்சுறுத்தல் - டெல்லி நகரில் லாரிகள் நுழைய தடை நீட்டிப்பு

Published On 2021-11-21 21:03 GMT   |   Update On 2021-11-21 21:03 GMT
டெல்லியில் நவம்பர் 26-ம் தேதி வரை அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 21-ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைய விதிக்கப்பட்ட தடை நவம்பர் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

காற்று தர நிர்வாக ஆணையத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது டெல்லி அரசு தெரிவிக்கும்வரை டெல்லிக்குள் வாகனங்களை இயக்கக் கூடாது என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News