செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி

Published On 2021-09-15 16:10 GMT   |   Update On 2021-09-15 16:10 GMT
கோவை மாவட்டத்தில் பூங்கா, திரையரங்குகள், மால்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது, தினசரி பாதிப்பு சென்னையைவிட கோவையில் அதிகமாக பதிவானது. பின்னர் மாவட்ட நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து கட்டுக்குள் கொண்டு வந்தது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500-ல் இருந்து 1650-க்குள் இருந்து வருகிறது. சில நாட்கள் 1600-ஐ தாண்டுகிறது. சில நாட்கள் 1600-க்குக்கீழ் பதிவாகி வருகிறது. மாவட்ட அளவில் சென்னையைக் காட்டிலும் கோவையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வருகிறது.

இருந்த போதிலும் வருகிற 30-ந்தேதி வரை கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள், பூங்காக்கள், மால்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், அடுமனைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டுமே இயங்கலாம்.

இதற்கிடையே தனியார் கல்லூரி  விடுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News