செய்திகள்
உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ - பதாகையுடன் விவசாய சங்கத்தினர்

‘உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ - பதாகையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்கத்தினர்

Published On 2021-01-08 12:30 GMT   |   Update On 2021-01-08 12:30 GMT
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது ‘நாங்கள் உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம் என்ற பதாகையுடன் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 44-வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே இன்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது விவசாய சங்க தலைவர்கள் ‘நாங்கள் உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ என்ற பதாகையுடன் பங்கேற்றனர். 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என மத்திய அரசும் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்களும் உறுதியாக இருந்ததால் இன்று நடைபெற்ற 8-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்புக்கும் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News