செய்திகள்
ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் - வரலாற்று சாதனை படைத்தது நாசா

Published On 2021-04-19 19:00 GMT   |   Update On 2021-04-20 07:13 GMT
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை கடந்த 11-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Tags:    

Similar News