ஆன்மிகம்
சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2021-02-08 07:49 GMT   |   Update On 2021-02-08 07:49 GMT
சீர்காழி தாலுகா செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தர்மராஜா மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News