செய்திகள்
கோப்புபடம்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-27 09:51 GMT   |   Update On 2021-10-27 09:51 GMT
தண்ணீர் திறப்பால் திருப்பூர் மாவட்டத்தில் 4,686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஆறு பழைய ராஜவாய்க்கால்களுக்கு (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) இரண்டாம் போக பாசனத்துக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 1,404மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று  முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி வரையிலான 120 நாட்களில் (நாளொன்றுக்கு 250 கன அடி வீதம் 65 நாட்கள் தண்ணீர் திறப்பு -& 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) தகுந்த இடைவெளி விட்டு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி அளித்தது. 

இதையடுத்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 4,686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News