செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்

Published On 2017-01-01 05:41 GMT   |   Update On 2017-01-01 05:41 GMT
10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார்.

நியூயார்க்:

ஐ.நா. பொதுச் செயலாளராக பான்-கி-மூன் பதவி வகிக்கிறார். இப்பதவியில் இவர் 10 ஆண்டுகளாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.

அதை தொடர்ந்து அவர் பணி ஓய்வு பெறுகிறார். அதற்கான பிரிவுபசார விழா நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையில் நடந்தது.

அதில் பங்கேற்ற அவர் 10 ஆண்டுகளாக தான் செய்த பணிகளை நினைவு கூர்ந்தார். தற்போது தான் சின்ரெல்லா போன்று உணர்வதாகவும் நாளை (இன்று) நள்ளிரவு முதல் அனைத்தும் மாறப்போகிறது என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

பான்-கி-மூன் தென் கொரியாவை சேர்ந்தவர். இவர் ஐ.நா.சபையின் 8-வது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். கடந்த 2007 ஜனவரி முதல் 2016 டிசம்பர் வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார். இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர்.

Similar News