வழிபாடு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை தொடங்குகிறது சித்திரை பிரம்மோற்சவம்

Published On 2022-04-15 07:18 GMT   |   Update On 2022-04-15 07:18 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை 16-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று காலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News