செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

50 மாவட்டங்களில் கொரோனா நடத்தை விதிகளை புறக்கணித்தது கண்டுபிடிப்பு - மத்திய அரசு தகவல்

Published On 2021-04-11 23:37 GMT   |   Update On 2021-04-11 23:37 GMT
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் மிகவும் பாதித்த பகுதிகளாக 50 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் மிகவும் பாதித்த பகுதிகளாக 50 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் மராட்டியத்தின் 30 மாவட்டங்கள், சத்தீஸ்கார் மற்றும் பஞ்சாப்பில் முறையே 11, 9 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்ததில் மேற்படி பகுதிகளில் கொரோனா பொருத்தமான நடத்தை விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மராட்டியத்தின் பல மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஒதுக்கியது, கண்காணிப்பு, பரிசோதனை வசதிகள் போன்றவற்றில் பயங்கரமான குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அத்துடன் வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவையும் சில மாவட்டங்களில் உள்ளன.

சத்தீஸ்காரின் ராய்ப்பூர், ஜாஷ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு, கோர்பாவில் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் அலட்சியம், சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் போன்ற விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

இதைப்போல பஞ்சாப்பிலும் பெரும்பாலும் தொடர்பாளர்களை சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதில் குறைபாடு காணப்படுகிறது. அங்கும் பரிசோதனை எண்ணிக்கை குறைவு, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News