செய்திகள்
பால்

நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

Published On 2021-07-10 10:43 GMT   |   Update On 2021-07-10 10:43 GMT
நீலகிரி மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆவின் பால் விற்பனை நிலையங்கள் உள்ளது. இதுதவிர ஏஜென்சிகள் மூலம் கடைகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனையான ஆவின் பால் பாக்கெட்டுகளில் கடந்த மாதம் 2-ந் தேதி உற்பத்தியானது என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் காலாவதியான பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கண்ட தேதி குறிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. உரிய தேதியில் வந்த பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கினர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது:-

நீலகிரியில் ஏஜென்சிகள் மூலம் விற்பனை செய்த பால் பாக்கெட்டுகளில் தேதி தவறாக அச்சிடப்பட்டது தெரியவந்தது. காலாவதியான பால் இல்லை. அந்த பால் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர கோவையில் இருந்து அதிக கொழுப்புள்ள 8 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. நீலகிரியில் கொள்முதல் செய்யப்படும் 2 ஆயிரம் லிட்டர் பாலை பவுடராக மாற்ற ஈரோடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டும், ஊரடங்கால் விற்பனை குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வந்து பால் வாங்கி செல்கின்றனர். ஊரடங்கில் தினமும் 13 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது. விலை குறைப்பால் விற்பனை அதிகரித்து உள்ளது.


Tags:    

Similar News