ஆட்டோமொபைல்
மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ்.

இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். சிறப்பம்சங்கள்

Published On 2019-07-18 10:18 GMT   |   Update On 2019-07-18 10:22 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ 300 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மோஜோ 300 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இம்மமாத இறுதியில் மீண்டும் விற்பனை செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சோதனை யூனிட்கள் ஏற்கனவே சில விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. மோட்டார்சைக்கிளின் தெளிவான புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மஹிந்திரா மோஜோவின் சிறப்பம்சங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மோஜோ 300 மாடலில் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். மாடல் ஒற்றை வேரிண்ட்டில் கிடைக்கும்.

2019 மோஜோ 300 ஏ.பி.எஸ். மாடல் பார்க்க முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், ஃபியூயல் டேன்க் கீழ் இருக்கும் இரண்டு டியூப்கள் தங்க நிறத்திற்கு மாற்றாக கிளாஸ் பிளாக் நிறத்தில் காணப்படுகிறது.




புதிய மோஜோவின் என்ஜின் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும், இம்முறை இதன் செயல்திறன் குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய F1 கொண்ட மோஜோ மாடல் 27 பி.ஹெச்.பி. பவர் வழங்கிய நிலையில், புதிய மாடல் 23 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

புதிய மோஜோ 300 ஏ.பி.எஸ். மாடலில் 294.72சிசி, DOHC, சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26 பி.ஹெச்.பி. பவர், 3 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 4 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.

புதிய மோட்டார்சைக்கிள் 2115எம்.எம். நீளம், 1150எம்.எம். உயரம், 800 எம்.எம். அகலம் மற்றும் 1460 எம்.எம். வீல்பேல் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடை 165 கிலோ ஆகும். இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அப்சைடு டவுன் ஃபோர்க், முன்புறம் 320 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இரு பிரேக்களும் பைபர் சோர்ஸ்டு கேலிப்பர்கள் கொண்டிருக்கின்றன.

இத்துடன் புதிய மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஏ.பி.எஸ். இன்டிகேட்டர், பைரெலி ஏஞ்சல் சி.டி. டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். விலை இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதன் விலை ரூ. 1.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News