செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பழைய டயர்கள்

ஆலந்தூரில் போகி பண்டிகைக்கு எரிக்க முயன்ற 2½ டன் பழைய டயர்கள் பறிமுதல்

Published On 2020-01-14 09:27 GMT   |   Update On 2020-01-14 09:27 GMT
ஆலந்தூர் பகுதியில் போகி பண்டிகைக்கு எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 2½ டன் டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.
ஆலந்தூர்:

போகி பண்டிகையின்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியை சேர்ந்த ஆலந்தூர் மண்டலத்தில், மாநகராட்சி ஊழியர்கள் வீதிவீதியாக சென்று பழைய டயர்களை எரிக்க வேண்டாம் என்று அறிவித்தனர். என்றாலும் சில இடங்களில் பழைய டயர்களை எரிக்க சிலர் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாநகராட்சி ஊழியர்கள் ஆலந்தூர் பகுதியில் உள்ள வீடு, கடைகளில் சோதனையிட்டனர். அப்போது, எரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்த இந்த நடவடிக்கையில், ஆலந்தூர் பகுதியில் எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 2½ டன் டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

வழக்கமாக பழைய பொருட்களுடன் டயர்களையும் சிலர் எரிப்பார்கள். இதனால் காற்று மாசு அதிகமாக இருக்கும். இந்த முறை பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், ஆலந்தூர் மண்டலத்தில் டயர்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகை மாசு கட்டுப்படுத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News