தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி நியோ

விரைவில் இந்தியா வரும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2021-09-06 11:00 GMT   |   Update On 2021-09-06 11:09 GMT
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிடி சீரிசில் புது ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ஜிடி நியோ 2 பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3370 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.62 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.



சமீபத்தில் வெளியான ரென்டர்களில் ரியல்மி ஜிடி நியோ 2 மாடலின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட், மேட் பினிஷ் மற்றும் வளைந்த பேனல் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், டூயல்-எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News