செய்திகள்
கோரேகாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

Published On 2021-04-27 02:17 GMT   |   Update On 2021-04-27 02:17 GMT
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
மும்பை :

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏப்ரல் 26-ந் தேதி (நேற்று) மாலை 6 மணி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1.48 கோடி பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.



தற்போது மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 155 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 347 அரசு மையங்கள் ஆகும். 808 தனியார் மையங்கள் உள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி 4 லட்சத்து 62 ஆயிரத்து 735 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா புதிய சாதனையை படைத்து உள்ளது.

மகாராஷ்டிரா உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News