செய்திகள்
கோப்புபடம்

அரவை தொடங்குவது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு

Published On 2021-10-26 06:29 GMT   |   Update On 2021-10-26 06:29 GMT
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அடுத்தாண்டு அரவைக்கு இது வரை 1,08,000 டன்னுக்கும் கூடுதலாக கரும்பு பதிவு நடந்துள்ளது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அடுத்த ஆண்டு அரவை தொடங்குவது குறித்து சர்க்கரைத்துறை தலைமை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அடுத்தாண்டு அரவைக்கு இது வரை 1,08,000 டன்னுக்கும் கூடுதலாக கரும்பு பதிவு நடந்துள்ளது. பழனி, நெய்க்காரபட்டி, கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

நடப்பு ஆண்டு இரண்டரை மாதம் அரவை நடந்த நிலையில் 63,560 டன் கரும்பு அரவை செய்து 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக, 3,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பிருந்து கரும்பு பதிவு நடந்து வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு சர்க்கரை துறையின் தலைமை சர்க்கரை ரசாயனர் முத்து வேலப்பன் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அரவை தொடங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கரும்பு பதிவு குறித்து கேட்டறிந்தார். இதோடு ஆலையின் எந்திரங்கள், சுத்திகரிப்பு பணி, அரவைக்குத்தேவையான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News