ஆன்மிகம்
மயிலாடுதுறையில் ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2021-04-01 05:51 GMT   |   Update On 2021-04-01 05:51 GMT
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேரை திருவாவடுதுறை ஆதீனம் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே இருந்த தேர் பழுதடைந்து சேதமடைந்து விட்ட காரணத்தால் புதிய தேர் உருவாக்கப்பட்டது.

அதன்படி ரூ.30 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, அதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இந்த தேர் கோவில் சன்னதியில் புறப்பட்டு நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

பின்னர் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தேர் நிறுத்தும் செட்டில் தேர் நிறுத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
Tags:    

Similar News