செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

Published On 2021-07-20 08:38 GMT   |   Update On 2021-07-20 08:38 GMT
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,528-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை இரண்டு வாரங்களுக்கு முன்பு பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36 ஆயிரத்து 272-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 528-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 566 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.72 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்கிறது.
Tags:    

Similar News