செய்திகள்
நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

Published On 2019-11-18 14:48 GMT   |   Update On 2019-11-18 15:12 GMT
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை இன்று சந்தித்தார்.
புவனேஸ்வர்:

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் தனது பொதுவாழ்வு பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார்.

பின்னர், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்ட கமல்ஹாசன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோரை சந்தித்து வந்தார்.

குறிப்பாக,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியை கமல்ஹாசன் 3 முறை சந்தித்தார்.



இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை புவனேஸ்வரில் உள்ள அவரது அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என நவீன் பட்நாயக் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   
Tags:    

Similar News