உள்ளூர் செய்திகள்
வழக்குப்பதிவு செய்ய கஞ்சா வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிட மாற்றம்

வழக்குப்பதிவு செய்ய கஞ்சா வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிட மாற்றம்

Published On 2022-05-06 11:42 GMT   |   Update On 2022-05-06 11:42 GMT
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் தேனி ஆயுதப்படைக்கும் தற்காலிக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சக்கரைப்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் ஈஸ்வரன்(39), காட்டுராஜா(35). கடந்த மாதம் அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோரிடம் காட்டுராஜா மீது வழக்குபதிவு செய்ய ஈஸ்வரனிடம் கஞ்சா வாங்கிவரும்படி கூறினார்.

அதன்பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் கண்ணன் கஞ்சாவை பறிமுதல் செய்து ஈஸ்வரனை கைது செய்யவேண்டும் என்றார். கஞ்சா வியாபாரிகளை போலீசார் தேடிச்சென்றபோது ஒன்றரை கிலோ கஞ்சாவை ஈஸ்வரன் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதை கைப்பற்றிய போலீசார் வடபுதுப்பட்டியில் உள்ள போலீஸ்காரர் ராஜா வீட்டில் அந்த கஞ்சாவை பதுக்கி வைத்தனர். சக்கரைப்பட்டிக்கு சென்று இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணனிடம், காட்டுராஜாவை ஏன் கைது செய்யவில்லை என ஈஸ்வரன் கேட்டார்.

தனிப்படை போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். இந்த விபரம் இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு தெரியவரவே அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் தேனி சைபர்கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரிலேயே கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்ததாகவும், அவர் பந்தோபஸ்து மற்றும் ரோந்து பணியில் இருந்ததால் இதுகுறித்து அவருக்கு தெரிவிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ்காரர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோர் தேனி ஆயுதப்படைக்கும் தற்காலிக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News