ஆன்மிகம்
10 மாதங்களுக்கு பிறகு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்

10 மாதங்களுக்கு பிறகு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்

Published On 2021-02-16 08:13 GMT   |   Update On 2021-02-16 08:13 GMT
10 மாதங்களுக்கு பின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் கோவில், மசூதி, தேவாலயம் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

கோவில்களில் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பிரசாதம் நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால், 10 மாதங்களுக்கு பின் மாநிலம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று முதல் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாரம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News