செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1.2 சதவீதமாக குறைந்தது - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2020-09-25 01:43 GMT   |   Update On 2020-09-25 01:43 GMT
தமிழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறோம். இதை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 129 என்ற எண்ணிக்கையில் இருந்த இறப்பு, 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே எங்களது இலக்கு. தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 90.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண நிதிக்கு ரூ.7,322.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
Tags:    

Similar News