செய்திகள்
மகரஜோதி

பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சி தந்தது மகரஜோதி

Published On 2021-01-14 13:42 GMT   |   Update On 2021-01-14 13:42 GMT
சபரிமலையையே அதிர வைக்கும் சரண கோஷத்திற்கு மத்தியில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சி தந்தது மகரஜோதி.
சபரிமலை ஐப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா இன்று நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது.

மாலை 6.25 மணிக்கு 18-ம்படி வழியாக சோபானத்திற்கு வந்ததை தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.

தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி காட்சி தந்தது. அப்போது சபரிமலையையே அதிர வைக்கும் சரண கோஷம் எழுப்பினர் பக்தர்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜோதி தெரியும் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News