செய்திகள்
பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

இயற்கை பேரிடர் பாதிப்பு- நெல்லுக்கான நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆக உயர்வு

Published On 2021-02-23 06:58 GMT   |   Update On 2021-02-23 06:58 GMT
குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள்:-

* விபத்து, ஆயுள் காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி., யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து துவக்கம்
* குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்
* நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்
* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாம் வழங்கப்படும்.

* சட்டம் ஒழுங்கிற்கு ரூ.9567 கோடி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.1953 கோடி ஒதுக்கீடு
* கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு
* காவல் துறையை நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

* 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்
* கோவை மெட்ரோ ரெயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

* இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு
* மேட்டூர் அணை திறப்பால் 4.1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி
* கால்நடைகளுக்காக அம்மா அவசர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது
* மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிப்பு

* மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு
* சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு அவினாசி திட்டம் விரைவில் நிறைவு பெறும்
* தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் மார்ச் 2022ல் நிறைவு பெறும்
Tags:    

Similar News