செய்திகள்
நோபல் பரிசு

கொரோனா பரவல் எதிரொலி - இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து

Published On 2021-09-24 22:30 GMT   |   Update On 2021-09-24 22:30 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சுவீடன்:
             
நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு சாதனைக்காக  தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன. 

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில்  வரும் டிசம்பரில் 10 அன்று நோபல் பரிசு வழங்கப்படும்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்  விதர் ஹெல்ஜெசன் கூறியுள்ளார். 

தொற்றுநோய் மற்றும் சர்வதேச பயண சாத்தியக் கூறுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் நாடுகளில் அதனை பெற்றுக் கொள்வார்கள் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News