செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரம்

Published On 2021-07-17 08:49 GMT   |   Update On 2021-07-17 08:49 GMT
ஆக்கிரமிப்பு அகற்றும்படி எச்சரித்தபோதும் கேட்காத கடை உரிமையாளர்கள், பொக்லைன் எந்திரம் வந்தவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்கின்றனர்.
திருப்பூர்:

ஆக்கிரமிப்பு அகற்றும்படி எச்சரித்தபோதும் கேட்காத கடை உரிமையாளர்கள், பொக்லைன் எந்திரம் வந்தவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்கின்றனர். 

திருப்பூர் மாநகராட்சி, குமார் நகர், வளையன்காடு, சாமுண்டிபுரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிக அளவில் காணப்பட்டது. பல்வேறு கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து, பந்தல், ஷெட் அமைத்து கடையை விரிவுபடுத்தி இருந்தனர். சாலை குறுகலாகி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது. 

இந்தநிலையில் மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், தலைமையில்  உதவி பொறியாளர் ஹரி, சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றினர். இதன் மூலம்  சாலை விரிவாக்கம் பெற்றுள்ளது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் பொறுப்பேற்றபின் இதுபோல், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் வேகம் பெற்று வருகின்றன. 

ஆக்கிரமிப்பு அகற்றும்படி எச்சரித்தபோதும் கேட்காத கடை உரிமையாளர்கள், பொக்லைன் எந்திரம் வந்தவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்கின்றனர். பிரதான  சாலைகளிலும்  இதை அதிரடியாக மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். அகற்றியபின் ஆக்கிரமிப்பு மீண்டும் நேராமல் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News