செய்திகள்
சிங்கம் (கோப்புப்படம்)

ஐதராபாத் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-04 12:07 GMT   |   Update On 2021-05-04 12:07 GMT
இந்தியாவின் 2-வது கட்ட கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைப்பதுடன், மிருகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசி வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது, சூறாவளி போன்று சுழன்று அடிக்கிறது. தற்போதைய நிலையில் இந்த சூறாவளிக்கு தினந்தோறும் இந்தியாவில் 3.5 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டள்ளது. அங்கு 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் உடல்நிலை கண்காணிப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News