உள்ளூர் செய்திகள்
இந்த முன்னணியினர் சிவன் வேடமனிந்து எஸ்.பி.யிடம் புகார் அளித்த காட்சி.

மத கலவரத்தை தூண்டும் வகையில் யூடியூப்பில் பேசியவர் மீது நடவடிக்கை- இந்த முன்னணியினர் சிவன் வேடமனிந்து எஸ்.பி.யிடம் புகார்

Published On 2022-05-06 09:41 GMT   |   Update On 2022-05-06 09:41 GMT
மத கலவரத்தை தூண்டும் வகையில் யூடியூப்பில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த முன்னணியினர் சிவன் வேடமனிந்து எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
தருமபுரி, 

தருமபுரி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் கே.பி. முனுசாமி தலைமையில் இந்து முன்னணியினர் தருமபுரி எஸ்.பி. கலைச்செல்வனிடம் சிவன் வேடமனிந்து மனு அளித்தனர். 

அந்த மனுவில் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் சிதம்பரம் தில்லை நடராஜரை உள்ளூர் ஆட்டக்காரன் மற்றும் தாயார் தில்லைக் காளியை உள்ளூர் ஆட்டக்காரி என்றும் நடராஜர் தாண்டவம் ஆடும் போது உள்ளாடை அணியாமல் கொண்டு ஆடினார். 

இது மிகவும் ஆபாசமான வகையிலும் இரு பிரிவினருக்கிடையே பகைமையையும், காழ்ப்புணர்ச்சி யையும் உருவாக்கி மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் யூடியூப் சேனலில் விஜய் என்பவர் பேசியுள்ளார்.

இந்துகளின் தெய்வமாகவும் விளங்கும் நடராஜரையும், தில்லைக்காளியையும் அவர் ஆடும் தாண்டவத்தையும் மிகவும் இழிவாக பேசி அதன் மூலம் இந்துகளின் மனதை புண்படும்படி செயல்பட்டு அதன் மூலம் பொது அமைதியை ஏற்படுத்தியுள்ளார். 

இதனால் கலவரத்தை தூண்டி,தேசப் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட யூடியூப்  சேனல் விஜய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News