ஆட்டோமொபைல்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

சுமார் 2 லட்சம் யூனிட்களை திரும்ப பெறும் ராயல் என்பீல்டு

Published On 2021-05-20 06:11 GMT   |   Update On 2021-05-20 06:11 GMT
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்த சுமார் 2 லட்சம் யூனிட்களை ரீகால் செய்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் 2.3 லட்சம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்கள் இதில் அடங்கும். இக்னிஷன் காயிலில் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவை ரீகால் செய்யப்படுகின்றன.

இந்த கோளாறு மோட்டார்சைக்கிள் திறனை குறைப்பதோடு, வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. கிளாசிக் 350, Meteor 350 மற்றும் புல்லட் மாடல்கள் என மொத்தத்தில் 2,36,966 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.



இதில் Meteor 350 மாடல்கள் டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதேபோன்று கிளாசிக் மற்றும் புல்லட் மாடல்கள் ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

பாதிக்கப்பட்ட யூனிட்களில் சுமார் 10 சதவீதத்திற்கு மட்டுமே இக்னிஷன் காயிலை மாற்ற வேண்டிய நலை ஏற்படும் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. ரீகால் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற சந்தைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News