செய்திகள்
வைரல் புகைப்படம்

ஸ்ரீநகர் தாக்குதலில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2021-03-02 05:05 GMT   |   Update On 2021-03-02 05:05 GMT
ஸ்ரீநகர் தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு காவலர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுக்க பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவது போன்று காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வைரல் புகைப்படம் சமீபத்திய ஸ்ரீநகர் தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு  செய்ததில், அது 2016 ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் சமீபத்திய ஸ்ரீநகர் தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

சமீபத்திய ஸ்ரீநகர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி, சமீப நாட்களில் வேறு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஸ்ரீநகரில் இதுவரை ஏற்படவில்லை.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News