செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தேமுதிக: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2020-09-14 16:54 GMT   |   Update On 2020-09-14 16:54 GMT
தேமுதிக தனது 16-வது ஆண்டில் அடியெத்து வைத்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி தே.மு.தி.க.வை தொடங்கினார். அக்கட்சி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளை நிறைவு செய்து, 16-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் இன்று வந்தார். கட்சியின் கொடியை ஏற்றி வைத்த அவர், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கட்சி விழாவைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க-வின் 16-வது ஆண்டு துவக்க நாளினை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தே.மு.தி.க-வின் 16-வது ஆண்டு துவக்க நாளினை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன்.’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News