தொழில்நுட்பம்

ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

Published On 2019-04-05 05:43 GMT   |   Update On 2019-04-05 05:43 GMT
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த செயலி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsAppBusiness



ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்த செயலி உலகின் சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் இந்த செயலி அறிமுகமானது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பதிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் சிறு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் தளமாக விளங்குகிறது. இந்த செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் அம்சம் வியாபாரம் செய்யும் பயனரை வியாபார விவரங்களை விரிவாக பதிவிட வழி செய்கிறது. அதன் மூலம் பயனர்கள் வியாபார விவரம், வலைதளம், முகவரி, தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிடலாம்.



இதுமட்டுமின்றி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப ஏதுவாக மெசேஜிங் டூல்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இதனை கொண்டு பயனர்கள் உடனடியாக பதில் அளிப்பது, வாழ்த்து குறுந்தகவல் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்க முடியும்.

இன்று முதல் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, பிரேசில், ஜெர்மனி, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கிடைக்கும் என்றும் அதன் பின் வரும் வாரங்களில் மற்ற நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News