ஆன்மிகம்
முத்தாரம்மன்

செம்மறிக்குளம் கஸ்பா முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-09-24 05:28 GMT   |   Update On 2021-09-24 05:28 GMT
கஸ்பா முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் நாராயண சுவாமி கோவில் எதிரே உள்ள கிழக்கு நுழைவு வாயில் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செம்மறிக்குளம் கஸ்பா முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் நாராயண சுவாமி கோவில் எதிரே உள்ள கிழக்கு நுழைவு வாயில் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு நாளை மறுநாள் காலை 7.30 மணிக்கு சந்திரன் நாடார் கட்டிய நுழைவு வாயில் திறப்பு விழா நடக்கிறது.

கோவில் தர்மகர்த்தாவும், உடற்கல்வி ஆசிரியருமான விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக ஜெய் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் சுப்பையா, பட்டு நடேசன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு நுழைவு வாயிலை திறந்து வைக்கின்றனர். அன்று இரவு 7 மணிக்கு நாராயண சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

மறுநாள் காலையில் பால்குடம் எடுத்து வருதல், அலங்கார தீபாராதனை, இரவில் அம்மன் வீதி உலா வருதல், மாவிளக்கு பெட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் ஆகியன நடக்கிறது. 28-ந் தேதி பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா வருதல், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

இரவு 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் சப்பர பவனி நடக்கிறது. புதன்கிழமை காலை உணவு பிரித்தல், இரவு இன்னிசை கச்சேரி நடக்கின்றது.
Tags:    

Similar News