ஆன்மிகம்
திருநகரி கல்யாண ரங்கநாதசாமி கோவில் பங்குனி் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருநகரி கல்யாண ரங்கநாதசாமி கோவில் பங்குனி் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-24 04:58 GMT   |   Update On 2021-03-24 04:58 GMT
திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் கோவிலில் ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கொடியை ஏற்றி வைத்தனர்.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News