செய்திகள்
விராட் கோலி

2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி

Published On 2019-11-13 11:52 GMT   |   Update On 2019-11-13 11:52 GMT
இங்கிலாந்து தொடரின்போது 2014-ல் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அப்போது உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அப்போது மனஅழுத்தம் (mental health issues) காரணமாக கிரிக்கெட் இருந்து சிறிது காலம் தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், மேக்ஸ்வெல்லின்  நிலையை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தது.

மேக்ஸ்வெல் மனஅழுத்தத்தை அடுத்தவரிடம் எடுத்துக் கூறியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. எனக்கும் 2014-ல் இதுபோன்று நடந்தது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு, அணியில் உள்ள வீரர்களுக்கு இடையிலான கம்யூனிகேசன் (பேசும் திறன்) அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மேக்ஸ்வெல் தற்போது மனஅழுத்தம் குறித்து பேசியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும்.

2014 இங்கிலாந்து தொடரின்போது எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன். ஆனால், என்ன செய்ய வேண்டும், இதுகுறித்து யாரிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.

கிரிக்கெட் உலகில் மேக்ஸ்வெல் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்திவிட்டார். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்கவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வீர்கள். ஆனால், மனிதர்களாகிய உங்களுக்கு நில நேரங்களில் ஆலோசனைகள் அல்லது போதுமான நேரங்கள் தேவை’’ என்றார்.
Tags:    

Similar News