ஆன்மிகம்
மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும்

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரம்

Published On 2021-08-11 08:53 GMT   |   Update On 2021-08-11 08:53 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான 5-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 8-ம் நாளான 9-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

9-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Tags:    

Similar News