செய்திகள்
அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி - கனிமொழி தொடங்கி வைத்தார்

Published On 2021-10-10 05:32 GMT   |   Update On 2021-10-10 05:32 GMT
ஆதிச்சநல்லூரில் ஐரோப்பா மற்றும் சீனாவில் அமைந்துள்ள அருங்காட்சியகம் போல் கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்களை முழுமையாக கண்ணாடியில் வைத்து காட்சிப்படுத்தப்படும் என கனிமொழி கூறியுள்ளார்.
செய்துங்கநல்லூர்:

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்தது.

பின்னர் ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பிலும், தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் 17 ஆண்டு களுக்கு பின்னர் மத்திய தொல்லியல்துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.

அகழாய்வு பணியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி
எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது.

பின்னர்
கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 17 கோடி போதுமானதாக இருக்காது. எனவே
மத்திய அரசு
இந்த தொகையை உயர்த்தும் என நம்புவோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்த அகழாய்வில் கண்டுப்பிடிக்கப்படும் முது மக்கள் தாழிகள் மற்றும் பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்படும்.

மேலும் இந்த இடத்தில் ஐரோப்பா மற்றும் சீனாவில் அமைந்துள்ள அருங்காட்சியகம் போல் கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்களை முழுமையாக கண்ணாடியில் வைத்து காட்சிப்படுத்தப்படும்.

மேல் பகுதியில் பிரமாண்டமாக செட் அமைத்து அனைத்து மக்களும் பார்த்து செல்லும்படி இந்த இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சிறு சிறு பொருட்கள், சென்னை, லண்டன், பெர்லின் போன்ற நகரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆதிச்சநல்லூருக்கு கொண்டு வந்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags:    

Similar News