செய்திகள்
செல்போன்

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வினியோகம் - புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் விவரம்

Published On 2020-01-09 18:13 GMT   |   Update On 2020-01-09 18:13 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், 2 அடி நீள கரும்பு துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும்.

இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பகுதி வாரியாக பிரித்து வழங்கப்படும். விடுப்பட்ட அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ரேஷன்கார்டு தாரர்களும், தங்கள் ரேஷன்கார்டு இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் குடும்ப அட்டைதாரரோ அல்லது அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள யாரேனும் ஒருவரோ சென்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இப்பணியை கண்காணிக்க சப்-கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து புகார்கள்-குறைபாடுகள் இருப்பின் அவற்றை பெரம்பலூர் தாலுகாவிற்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 94454 77838 என்ற செல்போன் எண்ணிலும், பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலரை 94450 00271 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இதே போல் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை 73388 01267 என்ற செல்போன் எண்ணிலும், வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலரை 94450 00272 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். குன்னம் தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 94450 00270 என்ற செல்போன் எண்ணிலும், குன்னம் வட்ட வழங்கல் அலுவலரை 94450 00273 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆலத்தூர் தாலுகாவிற்கு துணைப்பதிவாளரை (பொது வினியோக திட்டம்) 94435 92506 என்ற செல்போன் எண்ணிலும், ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலரை 94457 96445 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நியமனம் செய்துள்ள அலுவலருக்கு 94454 76298 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News