ஆன்மிகம்
பரிசுத்த திருக்குடும்பம்

நாகர்கோவிலில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று தொடக்கம்

Published On 2020-12-18 08:34 GMT   |   Update On 2020-12-18 08:34 GMT
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். கன்னியாகுமரி கிளாரட்சபை அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையுரையாற்றுகிறார்.

19-ந்தேதி முதல் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி நடக்கிறது.

24-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா தலைமை தாங்க, தளவாய்புரம் பங்குத்தந்தை செயில்சிங் மறையுரையாற்றுகிறார். இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பின் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு புதுகிராமம் பங்குத்தந்தை கிறிஸ்டோ டாபின் தலைமை தாங்க, பள்ளவிளை பங்குத்தந்தை பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார்.

26-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இதற்கு புன்னைநகர் பங்குத்தந்தை ஜாய் தலைமை தாங்க, இளங்கடை பங்குத்தந்தை துரைசாமி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணி சிறப்பு ஆராதனைக்கு தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்க, கோட்டார் பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

27-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். தேர்பவனி பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு பணவிளை இணைபங்குத்தந்தை ராபின் தலைமை தாங்குகிறார்.

31-ந்தேதி இரவு 11 மணிக்கு நன்றி வழிபாடும், நள்ளிரவு 11.45 மணிக்கு புதுவருட திருப்பலியும் நடைபெறுகிறது.

திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் பங்குத்தந்தை, ஊர் நிர்வாகத்தினர், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News