உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-04-16 10:02 GMT   |   Update On 2022-04-16 10:02 GMT
கரூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
கரூர்:


புனித வெள்ளியை-யொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடை-பெற்றது. கரூர் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின்துரை, பசுபதி-பாளையம் புனித கார்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து, புலியூர் குழந்தை யேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை ஞான-பிரகாசம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


மாவட்டத்தில் குளித்தலை, வேலாயுதம்பாளையம், சின்னதாரா-புரம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.

கரூர் புனித தெரசாள் ஆலயத்தில், இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் வகையில் மறைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் இயேசு மீது சிலுவை சுமத்தப்படுதல், தாய் மரியாள் சிலுவை சுமந்து வரும் மகனை சந்தித்து கதறுதல், சிலுவையுடன் கீழே விழும்-போது தூக்கிவிடுதல்,

முகத்தை துடைத்தல், சிலுவையில் அறையப்-படுதல்.பின்னர் இயேசுவின் சடலம் சிலுவையில் இருந்து கீழே இறக்கி வைத்து கற்பாறை குகைக்குள் வைத்தல் போன்ற வரலாற்று நிகழ்வை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர்.

Tags:    

Similar News