செய்திகள்
பார்க்

செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்துவதாக பார்க் அறிவிப்பு

Published On 2020-10-15 11:34 GMT   |   Update On 2020-10-15 11:34 GMT
செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக பார்க் அமைப்பு அறிவித்துள்ளது.
சில ஆங்கில செய்தி சேனல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் தெரிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் டிஆர்பி விஷயம் பேசும்பொருளானது. அதன் நம்பகத்தனமை மீது கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், டி.ஆர்.பி. ரேட்டிங்கை கணக்கிடும் அமைப்பான பார்க், ரேட்டிங்கை மூன்று மாத காலத்திற்கு நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், செய்தி சேனல்களின் பார்வையாளர்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படும் என்றும் தனித்தனி சேணல்களின் பார்வையாளார்கள் எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

சில நாட்ககளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ரிபப்ளிக் டிவி, பக்த் மாராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய செய்தி சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ₹400 முதல் ₹700 வழங்கப்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். படிப்பறிவில்லாத ஏழை மக்கள் கூட, தங்கள் வீடுகளில் இந்த ஆங்கில சேனல்களை ஆன் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரம் ஆனது.

டி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி பார்வையாளர்கள் குறித்த மதிப்பீட்டு முறையாகும். இந்த முறைப்படி, எந்த நிகழ்ச்சி அல்லது சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை மதிப்பிட டிவியில் ஒரு மீட்டர் பொருத்தப்படும்.
விளம்பர நிறுவனங்கள், இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்களை தருகின்றன. மதிப்பீட்டை பொருத்து செய்தி சேனல்கள் வருவாய் ஈட்டுகின்றன.

2014 ஆம் ஆண்டு, தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன் கீழ், ஜூலை 2015-ல், இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீடுகளை வழங்கும் அமைப்பாக பார்க் (BARC) அமைப்பானது அங்கீகரிக்கப்பட்டது.

BARC-ல் தொழில்துறையின் பிரதிநிதிகளாக, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, விளம்பரதாரர்களின் இந்தியன் சொசைட்டி மற்றும் இந்திய விளம்பர முகமை ஆகியவை உள்ளன. சேகரிக்கப்பட்ட மதிப்பீட்டு தரவுகளை பகுப்பாய்வு செய்து ஒவ்வொரு வாரமும் பார்க் வெளியிடுகிறது.

பார்க் மூலம் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளை ஒளிபரப்பு நிறுவனங்கள் கண்டறிந்தால், அந்த வீட்டினரிடம் பணம் கொடுத்தோ, பரிசு பொருள் கொடுத்தோ அந்த நிறுவன சேனல்களை பார்க்க கூறலாம்.  கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம், குறிப்பிட்ட சேனல்கள் முதலில் தெரிவது போன்று மாற்றலாம்.

குறிப்பாக டி.ஆர்.பி. ஆனது, மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளில் பார்க்கப்படுவதை வைத்துதான் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News