ஆட்டோமொபைல்
ஹோண்டா

இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. - ஹோண்டா அசத்தல் திட்டம்

Published On 2021-08-20 07:05 GMT   |   Update On 2021-08-20 07:05 GMT
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி.ஆர்.-வி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.


ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்.யு.வி. பிரிவில் மீண்டும் களமிறங்க இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்திய சந்தையில் ஹோண்டா சி.ஆர்.-வி மாடல் விற்பனை நிறுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. பிரிவில் ஹோண்டா அதிக கவனம் செலுத்தவில்லை.

"இந்திய சந்தையின் எஸ்.யு.வி. பிரிவை அறிந்து கொள்ள ஆய்வு செய்கிறோம். இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது." என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.



சில மாதங்களுக்கு முன் ஹோண்டா நிறுவனம் என்7எக்ஸ் கான்செப்ட் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்தது. என்7எக்ஸ் மாடல் இந்தியாவில் 5 இருக்கை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கு போட்டியாக அமையும். 
Tags:    

Similar News